ஸ்ருதிஹாசன் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி வருகின்றார். இவர் குறித்து எப்போதும் சர்ச்சைகள் வருவது சாதரணம் தான்.
ஆனால், இந்த முறை இந்தியாவின் முன்னணி ஆங்கில பத்திரிக்கை ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பாலிவுட்டில் பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூரை, ஸ்ருதி காதலித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்கள் சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்தனர், அதன் பிறகு தான் இந்த காதல் மலர்ந்ததாக கூறியுள்ளனர்.
ரன்பீர் ஏற்கனவே தீபிகா படுகோன், கேத்ரினா கைப் ஆகியோரை காதலித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.