Tuesday, October 8
Shadow

ரசிகர்களுக்கு ஸ்ருதி ஹாசன் வைத்த கோரிக்கை : கேட்பார்களா?

சமீபத்தில் இணையதளங்களில் மிகவும் பெரியதாக வளம் வரும் பிரச்சனை என்றால் அது பிரேமம் தான் மலயாளத்தில் வந்த இந்த படம் மிகபெரிய வெற்றியடைந்தது இதை தொடர்ந்து இந்த படத்தை பல மொழிகளில் ரீமேக் பண்ண தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர் அந்த வகையில் இந்த படம் தமிழில் தனுஷ் தயாரிக்க விஜய்சேதுபதி ஹீரோ என்று பேச்சு அடிபட்டது ஆனால் விஜய் சேதுபதி அய்யோ ஆளைவிடுங்க எனக்கு அந்த கதாபாத்திரம் செட் ஆகாது என்று சொன்னதால் விட்டுவிட்டார்கள் ஆனால் தெலுங்கில் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யா ஹீரோவாகவும் நம்ம சுருதிஹாசன் நாயகியாக நடிக்கின்றனர் .

ஸ்ருதிஹாசன் நடிப்பில் ப்ரேமம் தெலுங்கு ரீமேக் விரைவில் வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது.

இதில் ஸ்ருதிஹாசன் நடிப்பை பலரும் கிண்டல் செய்துள்ளனர், பல மிமிக்கள், வீடியோஸ் என நெட்டிசன்கள் கலக்கி வருகின்றனர்.

இதுக்குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில் ‘மலர் டீச்சரோடு தயவு செய்து என்னை ஒப்பிடாதீர்கள்.

ஒரிஜினல் கதாபாத்திரத்தை மறந்துவிட்டு, நான் நடித்துள்ள படத்தைப் பார்த்து விமர்சனம் செய்யுங்கள்.

மக்கள் படத்தைப் பார்ப்பதற்கு முன் ஒரு அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டாம், ப்ளீஸ்’ என கேட்டுள்ளார்.

இதையெல்லாம் ரசிகர்கள் கேட்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply