சூர்யா தமிழில் அறிமுகம் ஆகி பல போராட்டங்கள் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நிறந்தர இடத்தை பிடித்தார் என்று தான் சொல்லணும் அதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை பின்னர் இயக்குனர் பாலா மூலம் தான் முதல் அங்கிகாரம் கிடைத்தது என்று சொல்லணும். பின்னர் தமிழியில் இப்ப முக்கிய இடைதில் உள்ளார் என்றும் சொல்லணும் விஜய், அஜித், அடுத்து சூர்யா என்று சொல்லும் அளவுக்கு தமிழ் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் சூர்யாவின் போக்கு சமீபக்காலமாக தெலுங்கு பக்கம் போய்யுள்ளது.
தமிழ் சினிமாவி முக்கிய நட்சத்திரங்கள் ரஜினி கமல் இருவரும் பிற மொழிகளில் நடித்தாலும் தமிழுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதுநாள் தான் இன்றும் தமிழ் சினிமாவில் நிலைத்து நின்றார்கள். ஏன் அஜித் விஜய்யும் அப்படிதான் தமிழ் மட்டும் தான் முக்கியம் என்று பிடிவாதமாக இருகிறார்கள் இவர்களுக்கு தெலுங்கிலும் மலையாளதிலும் மிக பெரிய மார்க்கெட் இருந்தும் ஏன் பல வாய்ப்புகள் வந்தும் அந்த பக்கம் போனது இல்லை ஆனால் சூர்யா அப்படி இல்லை இன்றைய அவரின் மனநிலை என்னவென்றால் தெலுங்கு தான் என்று உள்ளார்.
ஹரி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் S3 இந்த படம் வரும் மாதம் 23ம் தேதி வெளியாகா இருக்கிறது இதே நேரத்தில் தெலுங்கிலும் இந்த படம் வெளியாகிறது. இந்த படம் ரிலீஸ் தேதியில் நிறைய மாற்றம் இருந்தது இது எல்லாமே தெலுங்குக்காக மட்டும் தான் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகவேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் ஆகவேதான் இதனை தேதி மாற்றங்களும் இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் இசை வெளியீடு தமிழில் விழா எல்லாம் வேண்டாம் எனக்கு வேலை இருக்கு என்று சொல்லி விட்டு சும்மா ஐ டுன்யில் ரிலீஸ் செய்யுங்கள் என்று சொல்லவிட்டு தெலுங்கில் மட்டும் மிக பிரமாண்டமாய் நாளை வெளியிடுகிறார்கள். இதற்காக பிரபல நட்சத்திர ஹோட்டலில் மிக விமர்சியாக நடைபெறயுள்ளது அது மட்டும் இல்லாமல் தமிழ் தொலைகாட்சிகள் மற்றும் இணையதளங்கள் பேட்டி கேட்டால் ஒரே வார்த்தை அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்பது தான், ஆனால் தெலுங்குக்காக அங்கு இருக்கும் எல்லா தொலைகாட்சிகளில் சூர்யா பேட்டி வருகிறதாம்.அதுவும் அவர்கள்பா கேட்கிறார்களே இல்லையே இவரே வலியவந்து பேட்டிகொடுக்கிரராம்இது தான் வளர்த்த கடா மார்பில் முட்டும் என்பார்கள் அந்த கதையாகிவிட்டது.
சூர்யா கடந்து வந்த பாதையை எப்பவும் மறக்க கூடாது