
ரஞ்சித்தை தொடர்ந்து முத்தையாவுக்கும் அல்வா கொடுத்தார் சூர்யா இதற்க்கு புண்ணியம் கண்டவர் நயன்தாரா அஜித்திடம் பலிக்காத பாட்ச சூர்யாவிடம் பலித்தது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அஜீத்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க முடியாது என்பதை நாசுக்காக தெரிவித்துள்ளார். தினமும் ரூ. 1 கோடி சம்பளம் தருகிறேன் என்று நயன் கூறியும் அஜீத் மசியவில்லை.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்தால் படப்பிடிப்பின்போது படம் பற்றிய செய்திகளை விட நயன்-விக்னேஷின் காதல் பற்றி தான் செய்திகள் வரும் என்று நினைத்த அஜீத் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லையாம்.
அஜீத் நடிக்க மறுத்த செய்தியை கேட்டு விக்னேஷ் கவலை அடைந்தாராம். இதையடுத்து நயன்தாரா மனம்தளராமல் சூர்யாவை அணுகி எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
நான் எஸ் 3 படத்தை முடித்துவிட்டு முத்தையா படத்தில் நடிக்க உள்ளேனே என்று சூர்யா கூற ப்ளீஸ் ஏதாச்சும் செய்யுங்க என்று நயன் கேட்டாராம். இதையடுத்து தான் சூர்யா முத்தையாவை விட்டுவிட்டு விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.