ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளிபோய் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 23-ல் தனது போகன் படத்தை வெளியிடவிருந்த ஜெயம்ரவி கொஞ்சம் அப்செட்டில் உள்ளாராம்.