Tuesday, October 8
Shadow

சூர்யா முக்கிய இயக்குனர்களுக்கு நோ விக்னேஷ் சிவனுக்கு எஸ் குழப்பத்தில் கோலிவுட்

விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரௌடிதான்’ படம் மிகப் பெரிய வசூலை மட்டும் இல்லாமல் , விஜய்சேதுபதி, நயன்தாரா படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், இசையமைத்த அனிருத் ஆகியோருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

அடுத்து ஒரு படத்தை இயக்குவதற்கு பல முன்னணி ஹீரோக்களுக்கு வலை வீசினார் விக்னேஷ் சிவன். அந்த ‘வலை’ யார் என்பது உங்களுக்கே தெரியும்.

அஜித், விஜய் இருவரும் அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்களை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டதால் விக்னேஷ் சிவன் வீசிய வலையில் அவர்கள் சிக்கவில்லை.

சூர்யாவையும் சந்தித்துப் பேசினார், ஆனால் முதலில் சூர்யா தரப்பிலிருந்து அதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்பட்டது. எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக பேசி, ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்துவிட்டார்கள்.

சூர்யாவிற்கும் பா.ரஞ்சித், முத்தையா ஆகியோருடன் இணைந்து படம் செய்ய ஒத்துவரவில்லை. கௌதம் மேனனுடன் பேசிய பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக முடியவில்லை. அதனால், அடுத்து ஒரு பெரிய இயக்குனருடன், பிரம்மாண்டமான படம் செய்வதற்கு முன்பாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை எளிமையாக எடுத்து முடித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து சூர்யா அவருடைய தயாரிப்பிலேயே நடிக்கும் படம் இது. இனி, சூர்யாவை வேறு தயாரிப்பாளர்களின் படத்தில் நடித்துப் பார்ப்பது நடக்காத விஷயம். அவருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் சேர்த்தே ஐந்தாறு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் ரஞ்சித் கெளதம் மேனன் போன்ற முக்கிய இயக்குனர்களுக்கு நோ சொன்ன சூர்யா விக்னேஷ் சிவனுக்கு எஸ் சொன்னதும் கோலிவுட்யில் ஒரு சலசலப்பு உண்டாகியுள்ளது .

சூர்யாவின் இந்த தொடர் நடவடிக்கை முன்னணி தயாரிப்பாளர்களிடம் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்.

Leave a Reply