Wednesday, April 30
Shadow

சூர்யாவின் புது முடிவு இனி வெளி படங்களில் நடிக்க மாட்டேன்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘எஸ் 3’ இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சூர்யா, ‘கபாலி’ இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரஞ்சித் மீண்டும் ரஜினிகாந்தை இயக்க உள்ளதால் ரஞ்சித்தும், சூர்யாவும் இணைய வேண்டிய படம் தள்ளிப் போடப்பட்டதா அல்லது கைவிடப்பட்டதா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

ஒரு வேளை இது குறித்து முன் கூட்டியே தெரிந்துதான் ‘கொம்பன், மருது’ படங்களின் இயக்குனர் முத்தையா படத்தில் நடிக்க சூர்யா முடிவெடுத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

சூர்யா, இனி அனேகமாக மற்றவர்களின் தயாரிப்பில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். அவருக்குச் சொந்தமான நிறுவனத்திலோ, அல்லது அவருடைய உறவினர்கள் நிர்வகித்து வரும் நிறுவனங்களிலோ தான் நடிக்க உள்ளார் என்றும் சொல்கிறார்கள்.

சமீபத்தில் கூட பாலா அவரை நடிக்க அழைத்த போது அந்தப் படத்தை தன்னுடைய கம்பெனியில் செய்ய வேண்டும் என்று சூர்யா கேட்டதாகவும், அதற்கு பாலா மறுத்துவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

இதனிடையே, முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் அவருடைய ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ‘இறுதிச் சுற்று’ ரித்திகா சிங்க ஆகியோர் நாயகிகளாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

எப்போதுமே முன்னணி ஹீரோயின்களுடன் மட்டுமே நடிக்கும் சூர்யா இப்படி இரண்டு பட, ஒரு பட ஹீரோயின்களுடன் ஜோடி சேர எப்படி சம்மதித்தார் என கோலிவுட் வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.

Leave a Reply