S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் “சுவாதி கொலை வழக்கு” நிஜ சம்பவம் படமானது.
ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்குசுவாதி கொலை வழக்கு என்றுபெயரிட்டுள்ளனர்..
சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூரத்தை கையில்எடுத்திருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன்..இவர் விஜயகாந்த் நடித்த உளவுத்துறை அருண்விஜய் நடித்த ஜனனம் மற்றும் வஜ்ரம் படத்தையும் இயக்கியவர்.
இந்தப் படத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிரா நடிக்கிறார்.
மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.
கதை வசனத்தை R.P.ரவி எழுதி இருக்கிறார்…இவர் ஏற்கெனவே விமல் நடித்த சில்லுன்னு ஒரு சந்திப்பு மற்றும் தற்காப்பு போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் S.D.ரமேஷ்செல்வன்.
தயாரிப்பு: S.k.சுப்பையா.
நிஜ சம்பங்களை படமாக்கும் போது சுவாரஸ்யத்திற்காகவும் பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு…ஆனால் சுவாதி கொலை வழக்கு படத்தில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப் பட வில்லை..
நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர்..பரபரப்பான சம்பவங்கள் இந்தபடத்தின் சிறப்பம்சம்..மக்களுக்கு தெரிவிக்கப் படாத நிறைய சம்பங்கள் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ளது…
அந்த காட்சிகளை திரையில் பார்க்கும் ஒவ்வொருவரும் மனமும் திடுக்கிட்டுப்போகும்.. இப்படி கூடவா நடக்கும் என்று யோசிப்பார்கள் என்றார் இயக்குனர்.