
அஜித்தை பார்த்தே ஆக வேண்டும்: புருனே இளவரசியின் ஆசை
தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித். தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு இவருக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. பல்வேறு முன்னணி நடிகைகளும் இவரோடு ஜோடி போட்டு நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான புருனே நாட்டின் இளவரசி அஜித்தை பார்க்க ஆர்வம் காட்டியுள்ளார்.
உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரமான அரண்மனை புருனே நாட்டில்தான் உள்ளது. புருனே மன்னர்களும், இளவரசர்களும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கடந்த வாரம் புருனே நாட்டின் அரண்மனையில் நடைபெற்ற உலகின் வைர முதலாளிகளுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விருந்தில் பல நாட்டைச் சேர்ந்த குத்துப்பாடல்கள் இசையமைக்கப்பட்டு எல்லோரும் நடனமாடினர். அப்போது ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடலும் இசையமைக்கப்பட்டது. அதைக்கேட்ட ...