அநேகன் மாரி தங்கமகன் வரிசையில் தொடரி அமோகம்! திரைவிமர்சனம்!
கதை கேட்காமல் படம் நடித்தேன் என்று சொல்லும்பொழுதே சுதாரித்து இருந்து இருக்க வேண்டும் ரசிக பெரு மக்களே
“இந்த கதையை கேட்காமலே இருந்து இருக்கலாம்” திரையரங்கத்தில் ரசிகர்களின் முனு முனுப்பு..!
படத்தின் கதை
தனுஷ் ரயிலில் கேண்டின் பாயாக வேலை செய்ய, அதே ரயிலில் ஒரு ஹீரோயினின் டச்சப் கேர்ளாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். பிரபு சாலமன் படம் என்றாலே பார்த்தவுடன் காதல் தீப்பிடிக்க, அதன் பிறகு ‘என் உடம்புக்குள்ள புகுந்து என் உசுர எடுத்துட்ட’ன்ற வசனத்துடன் ஒரு காதல் வரும், அதே காதல் தான் இதிலும்.
கீர்த்தி சுரேஷிற்கு பெரிய பாடகி ஆக வேண்டும் என்று ஆசை. இவருடைய ஆசையை தெரிந்த தனுஷ் நெருங்கி பழக விருப்பப்பட்டு, எனக்கு வைரமுத்துவை தெரியும் என்று பொய் சொல்லி பழகுகிறார்.
ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து இருவரும் பிரிய, அதே நேரத்தில் என்ஜின் மாஸ்டர் நெஞ்சு வலியில் இறக்க, ரயில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் ...