‘அம்மா கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் ராஜேஷ் கதையில் வெங்கட் பிரபு இயக்கம்
படம் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடிக்க செய்யும் இரண்டு சிறந்த இயக்குனர்கள், வெங்கட் பிரபு மற்றும் ராஜேஷ். தமிழ் சினிமாவின் இரண்டு வலுவான தூண்களாக செயல்பட்டு வரும் இந்த இருவரும், ஒரு திரைப்படத்திற்காக கூட்டணி அமைத்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காது.... அப்படி ஒரு திரைப்படமாக அமைய இருக்கிறது ராஜேஷின் கதையில், வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படம்.
இந்த தகவலானது, கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற 'டூப்பாடூ ஆப்' வெளியீட்டு விழாவில் அதிகார பூர்வமாக வெங்கட் பிரபுவால் அறிவிக்கப்பட்டது. விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவை 'டூப்பாடூ' மற்றும் சென்னை 28 - II' குழுவினர் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.
"எங்களின் 'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனத்திற்கு இது ஒரு பெருமையான தருணம்...எங்கள் 'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டை...
