
ஆல்பம் மேக்கிங்கை வெளியிட்ட ஆங்கில படம் இசையமைப்பாளர் ரிக்கோ
தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிய இசையமைப்பாளர் ரிக்கோவும் இணைந்திருக்கிறார்.
ஹிப் ஹாப் கலைஞரான ரிக்கோ, இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ‘மய்யம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் திரையுலகினரால் அதிகம் பாராட்டப்பட்டது.
இப்படத்தை தொடர்ந்து ராம்கி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆங்கில படம்’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இது முதலில் ‘இங்கிலீஷ் படம்’ என்று பெயரிடப்பட்டு தற்போது ‘ஆங்கில படம்’ என்று மாற்றப்பட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசையும் சமீபத்தில் வெளியானது.
இதில் இடம் பெற்ற ‘இது இங்கிலீஷ் படம்...’ என்ற பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்கப்பட்டு வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் ரிக்கோவின் இசையை பாராட்டாதவர்கள் எவரும...