Thursday, December 1
Shadow

Tag: இறுதி கட்ட பணிகளில் ஹாரர் ‘தாயம்’

இறுதி கட்ட பணிகளில் ஹாரர் ‘தாயம்’

இறுதி கட்ட பணிகளில் ஹாரர் ‘தாயம்’

Latest News
'தாயம்' என்ற வார்த்தையை கேட்டாலே நம் நினைவுகள் யாவும் நம்முடைய குழந்தை பருவத்திற்கு செல்கின்றது. அரசனில் இருந்து சராசரி குடிமகன் வரை அனைவராலும் மதிக்கப்பட்ட, மதிக்கப்பட்டு வரும் ஒரு விளையாட்டு 'தாயம்'. அத்தகைய வலிமையான விளையாட்டின் பெயரை தலைப்பாக கொண்டு உருவாகி இருக்கிறது, 'பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்' சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்து இருக்கும் 'தாயம்' திரைப்படம். கலை நயத்தோடு குறும்படங்களை உருவாக்கும் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் இந்த 'தாயம்' திரைப்படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார் பி.திரு. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முழு நீள படத்தை ஒரே அறையில் படமாக்கி இருக்கும் பெருமை 'தாயம்' திரைப்படத்திற்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஹாரர் - சஸ்பென்ஸ் - திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் 'தாயம்' திரைப்படத்தில் 'கதை, திரைக்க...