
சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் சினேகா
ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்னதாகவே ரசிகர்களை ஈர்க்க கூடிய வலிமை ஒரு சில படங்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது. இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க இருக்கும் பெயர் சூட்டப்படாத திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரித்து வரும் இந்த திரைப்படமானது ஏற்கனவே பாஹத் பாசில், ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் தம்பி ராமையா என பல சிறந்த நடிகர்களை உள்ளடக்கி இருக்க, தற்போது இந்த திரைப்படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை சினேகா நடிக்க இருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது.
"கவிதை எழுதுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல... சிறந்த உருவகம், பொருத்தமான சொற்கள் என அனைத்தும் மனதில் இருந்து வர வேண்டும். அது போல தான் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பது என்பதும...