
சுசியின் ‘திருட்டுப்பயலாக’ பாபி சிம்ஹா, வில்லனாக பிரசன்னா ஒப்பந்தம்
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் ‘திருட்டுப்பயலே- 2’- இவர்களது வெற்றிக் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படைப்பு!. AGS நிறுவனத்தின் முதல் படமாக 2006ஆம் ஆண்டில் வெளிவந்து சக்கை போடு போட்டு வெற்றிவாகை சூடிய திருட்டுப்பயலின் இரண்டாம் பாகத்தை சரியாக பத்து ஆண்டுகள் கழித்து, கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்க செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
“உன் ரகசியம் என் கையில் இருக்கும் வரை உன் சிண்டு என் கையில்”- வித்தியாசமாக வில்லனே கதை நாயகனாக உலா வந்த தளத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், ‘பைவ் ஸ்டார்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாகவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்..! இரண்டு பேர் நடிப்பிலும், மிரட்டிலும் சிக்கிக் கொண்டு மிரள்கிற, மிரட்டுகிற ஒரு கதாநாயகியை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். முதல...