Monday, December 9
Shadow

Tag: #ஜுங்கா

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகி இருக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியிருக்கிறது. இதில் இயக்குநர் கோகுல், நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சமீபத்தில் வெளியான ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக்குக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜுங்கா என்ற கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் டானாக நடிக்கிறார். சித்தார்த் விப்பின் இசையமைக்கும் இந்த படம் கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
காதலர் தினத்தில் சிறப்பு விருந்து கொடுக்கும் விஜய் சேதுபதி

காதலர் தினத்தில் சிறப்பு விருந்து கொடுக்கும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி – இயக்குநர் கோகுல் கைகோர்த்துள்ள படம் ‘ஜுங்கா’. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா நடித்துள்ளார். மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இசையமைத்து வரும் இதற்கு டட்லி ஒளிப்பதிவு செய்து வருகிறார், இதனை ‘ஏ&பி குருப்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘திங்க் மிய...
ஜனவரி 6ம் தேதி விஜய் சேதுபதிக்கு முக்கியமான நாள்

ஜனவரி 6ம் தேதி விஜய் சேதுபதிக்கு முக்கியமான நாள்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுக குமார் இயக்கி வரும் இப்படத்தில் ஹீரோயினாக நிகரிகா நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி பழங்குடி இனத் தலைவராகவும் பல வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில், படக்குழுவினர் வெளியிட்ட பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை ஜனவரி 6ம் தேதி மலேசியாவில் நடக்க இருக்கும் நட்சத்திர கலைவிழாவில் வெளியிட இருக்கிறார்கள். மேலும் அதே விழாவில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘ஜுங்கா’ படத்தின் டைட்டில் டீசரையும் வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார். ஒரே நாளில் விஜய் சேதுபதி படங்களின் ஆடியோ மற்றும் டைட்டில் டீசர் வெளியாவது ரசிகர்களுக்கு இரட்டை ...