ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது
ஒட்டுமொத்த உலகமும் விநாயகர் சதுர்த்தியை மகிழிச்சியுடன் கொண்டாடி வரும் இந்த அற்புதமான நாளில், ஜெயம் ரவி - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏ வி எம் ஸ்டுடியோவில் பூஜையுடன் ஆரம்பமானது. 'திங்க் பிக் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் ஐந்தாம் படைப்பான இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜையில் ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு), இயக்குனர் மோகன் ராஜா, படத்தின் கதாநாயகி சாயீஷா சாய்கல் (அறிமுகம்), எடிட்டர் மோகன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் ஏ எல் அழகப்பன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தம்பி ராமையா ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, மாநில விருது பெற்ற புரொடக்ஷன் டிசைனர் ஜெயஸ்ரீ உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த பெயரிடப்படாத திரைப்படம் உள்ளடக்கி இருப்பது ம...