Monday, November 28
Shadow

Tag: டைரி

டைரி திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
நடிகர் அருள்நிதி, 'டி ப்ளாக்', 'தேஜாவு' என தொடர்ந்து திரில்லர் ஜெனரிலான திரைக்கதைகளை தெரிவு செய்து நடித்து வருகிறார். ஏன்? என்ற கேள்விக்கு அவர் தான் பொருத்தமான பதிலை அளிக்க வேண்டும். இருப்பினும் திரில்லர் திரைக்கதைகளில் இருக்கும் சுவாரசியம் இந்த ‘டைரி’யிலும் இருந்ததா? இல்லையா? என்பதை இனி காண்போம். சீனாவில் 1995 ஆம் ஆண்டில் மாயமாக மறைந்த 375 என்ற இலக்கம் உள்ள பேருந்தை மையப்படுத்தி, ஏராளமான கதைகள் உருவாகி இருக்கிறது, தமிழில் முதன்முதலாக ‘டைரி’ எனும் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. காவல் அதிகாரிக்கான பணி நியமனத்திற்கு முன் பயிற்சி காலகட்டத்தில், பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குற்ற வழக்கை ஒன்றை மீண்டும் தூசு தட்டி... அவை சரியான முறையில் தான் விசாரணை நடைபெற்று இருக்கிறதா? அல்லது ஏதேனும் புதிய தடயங்கள் அல்லது குற்றவாளிகளை இனம் காண முடிகிறதா? எனும் கோணத்தில் வழக்கு ஒன்றை இவர் தெரிவு செய்கிறார்....