மாரச் 1 முதல் தமிழ் படங்கள் ரிலீஸ் இல்லை…
கியூப் நிறுவனத்திற்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு எதிராக வரும் மார்ச் 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் (கில்ட்) ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது; பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என கியூப் நிறுவனர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்....