“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி..சைத்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் டி சிவா
கருணையுடன் பார்க்கும் கண்கள், வசீகரமான முக லட்சணம், கம்பீர தோற்றம் இவை அனைத்திற்கும் மேலாக ஒரு உன்னதமான மனிதர் இவை அனைத்தும் தான் நடிகர் - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் சிறப்பான குணங்கள். தமிழ் திரையுலகிலும் சரி, தெலுங்கு திரையுலகிலும் சரி, இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தன்னுடைய திரைப்படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளை தேர்வு செய்து அதன் மூலம் வெற்றி வாகையை சூடி வருவது தான் விஜய் ஆண்டனியின் தாரக மந்திரமாக இருக்கின்றது. அந்த வகையில் அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை வானளவு உயர்த்தி வருவது மட்டுமின்றி அவர்களிடம் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது. 3.11.2016 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற சைத்தான் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவே அதற்கு சிறந்த உதாரணம். தெலுங்கில் 'பெத்தலுடு' என்று தலைப்பிட பட்டிருக்கும் 'சைத்தான்' தி...