
‘தில்லுதுட்டு’ ராம் பாலாவுடன் இணையும் ஜி வி பிரகாஷ்
நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டு சிறப்பம்சங்களை கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.. தற்போது அந்த வரிசையில் இணைய தயாராக இருக்கிறது, 'தில்லுதுட்டு' க்கு புகழ் ராம் பாலா இயக்க இருக்கும் திரைப்படம். ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜி வி பிரகாஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தை, 'ஸ்டீவ்ஸ் கார்னர்' நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார் ஸ்டீபன்.
"இந்த திரைப்படம் மூலம் ஒரு வெற்றிகரமான கூட்டணியோடு இணைந்திருப்பது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. 'லொல்லு சபா' நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாட்களில் இருந்தே நான் இயக்குனர் ராம் பாலா சாரின் மிக பெரிய ரசிகன்.... அவருடைய டைமிங் காமெடியைம், கவுண்ட்டர் வசனங்களையும் பார்த்து நான் பல முறை வாய்விட்டு சிரித்ததுண்டு.... ச...