Tuesday, February 11
Shadow

Tag: படத்தின்

அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
அஜீத்தின் 'வலிமை, படத்தில் எடிட்டராக விஜய் வேலுக்குட்டி சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2019 டிசம்பரில் தொடங்கப்பட்ட 'வலிமை' படத்திற்காக அஜித் இயக்குனர் எச் வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார். இருப்பினும், கொரோனா தாக்குதல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது, மேலும் 2020 தீபாவளி வெளியீடு பின்னர் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது, ​​'வலிமை' தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அஜித்தின் நடக்கும் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் வேலுகுட்டி மேற்கொள்ளவார் என்று அறிவிகப்த்டுள்ளது. இதுவரை தனது அனைத்து படங்களிலும் வெவ்வேறு எடிட்டர்களுடன் பணியாற்றிய இயக்குனர் எச்.வினோத், 'வலிமை' படத்தில் 'ஜாக்பாட்' மற்றும் 'சங்கு சக்கரம்' படங்களில் பணியாற்றிய எடிட்டர் விஜய் வேலுகுட்டியுடன் இணைந்துள்ளார். இயக்குனர் எச். வினோத் 'வலிமை' படத்திற்கான பிந்தைய தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன....

நாளை வெளியாகிறது கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…..

Latest News, Top Highlights
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின் வில்லன் சஞ்சய் தத்தின் போஸ்டர் நாளை வெளியிடப்படவுள்ளது. கன்னட ஹீரோ யஷ் நடித்திருந்த கே. ஜி. எஃப் திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னடம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்த படம் வெளியாகி பிரமாண்ட வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து கே.ஜி.எஃப் சேப்டர் 2 படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகிறார். நாளை சஞ்சய் தத் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்துக் கூறும் விதமாக சஞ்சய் தத் போட்டோவுடன் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். "The only way is the BRUTAL way!!" என அவர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இ...

“பரியேறும் பெருமாள்” படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் பெரிய இடத்து வாரிசு

Latest News, Top Highlights
"பரியேறும் பெருமாள்" படத்தின் கன்னட ரீமேக்கில் இந்திய வங்கி நிறுவனர் திரு.வி.கிருஷ்ணசுவாமியின் கொள்ளு பேரன் அர்யன் ஷியாம் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் வங்கி நிறுவனரான திரு.வி.கிருஷ்ணசுவாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் கொள்ளுபேரன் அர்யன் ஷியாம், அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். வழக்கறிஞராக இருந்த போதும் திரு.வி.கிருஷ்ணசுவாமி பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியுள்ளார்.  அவர்கள் நடத்திய "அர்பத்நாட் பேங்க்கை" கீழிறக்கி, இந்தியர்களுக்கான வங்கி என்று இந்தியன் வங்கியை நிறுவினார். தமிழக சட்டமன்றத்தின் வெளியில், கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட சிலைகளில் இவர் முதல் இந்தியராவார். இன்றும், திரு.வி.கிருஷ்ணசுவாமியின்  நினைவாக அனைத்து இந்தியன் வங்கி கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. திரு.வி. கிருஷ்ணசுவாமியின் கொள்ளு பெயரனான  ஷியாம், ஏ.வி.எம். சரவணனின் பே...

வைரலாகி வரும் கே.ஜி.எப் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

Latest News, Top Highlights
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ் , தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம். 2018ம் ஆண்டு வெளியான இப்படம் பல விருதுகளை குவித்து கன்னட சினிமா உலகை பெருமையில் ஆழ்த்தியது. இந்த படத்திற்கு பிறகு இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்திய நடிகர் யாஷ்  ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்பட்டு இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். கன்னட சினிமாவில் முதன் முறையாக 100 கோடி வசூல் ஈட்டி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு சிறந்த சண்டை காட்சி மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டிற்கான தேசிய விருது பெற்றது. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ...

அருண்விஜய் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியீடு

Latest News, Top Highlights
நடிகர் அருண்விஜய் புதிய படம் ஒன்றில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். செக்கச்சிவந்த வானம், தடம் மற்றும் சாஹோ படங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா படத்தில் நடித்து, அந்த படத்தின் சூட்டிங்' நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், லேட்டஸ்ட் அப்டேட்டாக, தான் தனது 30-வது படத்தில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை ஹரிதாஸ் படத்தின் இயக்கிய ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி இந்த அருண்விஜயின் தந்தை விஜயகுமார் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது....

சூர்யா நடிக்கும் சூரரை போற்று படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…!

Latest News, Top Highlights
நடிகர் சூர்யா "காப்பான்" படத்தை அடுத்து "இறுதி சுற்று" பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் "சூரரை போற்று' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியதாக அபர்ணா முரளி நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் 2D Entertainment நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராப் ,மோகன் பாபு ,கருணாஸ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் ஜி .ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 14 ந் தேதி முடிவடைகிறது. மேலும் செப்டம்பர் 1 நடிகை ஊர்வசி இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாம்....

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு

Latest News, Top Highlights
கேஜெஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு டிக்கிலோனா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அறம், ஐரா, ஹீரோ மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த கோட்பாடி ராஜேஷ்சின் கேஜெஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கக் உள்ளது. சயின்ஸ் பிக்சன் காமடி கதையாக வெளியாக உள்ள இந்த படத்தை ஜெய்- அஞ்சலி நடித்த பலூன் படத்தை இயக்கிய கேஸ் சினிஸ் தயாரிக்க உள்ளார். கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்த படம் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரீலிஸ் ஆக உள்ளது....

ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாரா தல அஜீத்?

Latest News, Top Highlights
அஜித்தின் 61வது படம் ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூல் செய்தது. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். போனி கபூர் தான் தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க வினோத்தின் கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ள கதையை அடிப்படையாக கொண்டது. கார் ரேசர் மற்றும் போலீஸ் அதிகாரியாக அஜித் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான தல 61 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டமான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்து அஜித் பாராட்டியதாகவும், அதில் நடிக்க ஒ...

தனுஷ்-மாரிசெல்வராஜ் படத்தின் இணையும் மலையாள நடிகை…!

Top Highlights
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் பிரபல மலையாள நடிகை ராசிசா விஜயன் இணைந்துள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தை தற்காலிகாமாக கர்ணன் என்று பெயரிடப்பட்டு ப்ரீ புரோடைக்சன் நடந்து வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி 2 படத்தை தயாரித்த கலைபுலி எஸ் தாணு இந்த ப்டத்ஹ்டை தயாரிக்கிறார். தற்போது நடிகர் தனுஷ் கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....

சூப்பர்ஸ்டார் ரஜினி – சிவா இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை விஸ்வாசம் படத்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் பட சூட்டிங்களில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படம் வரும் 2020 பொங்கல் அன்று ரீலிஸ் ஆக உள்ளது....