
அடுத்த வருடம் அரவிந்த் சாமி எடுக்கும் புதிய முயற்சி
‘தளபதி’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘ரோஜா’, ‘மறுபடியும்’, ‘பாம்பே’, ‘இந்திரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
1999ம் ஆண்டு வெளியான ‘என் சுவாசக் காற்றே’ என்ற படத்திற்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு, ‘சாசனம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படம் மூலம் ரீஎன்ட்ரீ ஆனார். ஜெயம் ரவியுடன் நடித்த ‘தனி ஒருவன்’ இவருக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான பெயரை பெற்றுத் தந்தது.
தற்போது இவரது நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறா...