
புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும்.
புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும். இது crowd funded ( குழு முதலீடு ) மற்றும் crowd sourced முறையில் செய்யப்படும் ஒரு புதிய முயற்சி . இப்படம் உண்மையை மட்டும் பேசும் ஒரு பசுவின் கதை. இப்படம் மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும் தீங்கை பொழுது போக்கு விஷயங்களோடு சேர்த்து கூறும் புதுமையான ஒரு படைப்பு . இப்படத்தின் மூல கதை மஹாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
கருநாடு என்னும் கிராமத்தில் உண்மையை மட்டும் உரைத்து வாழும் ஒரு பசு மாடு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் புண்ணியகோடி என்னும் அந்த பசு மாட்டை ஒரு புலி பிடித்துவிடுகிறது. அப்போது புண்ணியகோடி புலியிடம் - நான் என் கன்றுக்கு பால் கொடுக்க வேண்டும் ஆதலால் என்னை விடுவிக்க வேண்டும், என் கன்றுக்கு பால் கொடுத்த பிறகு நான் திரும்பி வருகிறேன் என்று கேட்கிறது. பிறகு புண்ணிய கோடி தன் கன்றின் பசியாறிய...