பிரபல OTT தளத்தில் நேரடியாக வெளியாகும் ஜெயம் ரவியின் “பூமி”
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒன்று விரைவில் பிரபல OTT தளம் ஒன்றில் நேரடியாக பொங்கலுக்கு வெளியாக உள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தியேட்டர்காரர்களை கோபப்படுத்தியுள்ளது.
தற்போது இருக்கும் தமிழ் சினிமா நடிகர்களில் ஜெயம் ரவியின் படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான கோமாளி படம் வசூலில் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஜெயம் ரவி நடிக்கும் 25வது படமான பூமி. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்னதாக ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான பூமி படத்தின் பாடல்கள் உணர்வுப்பூர்வமாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் பூமி படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்கா...