தள்ளி போகிறது சாமி -2 பிரம்மன் இயக்குனர் சாக்ரடீஸ் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'இருமுகன்' திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறார் விக்ரம்.
இப்படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் 'சாமி 2'வில் நடிக்க திட்டமிட்டார். ஆனால், அதற்கு முன்பாக 'கரிகாலன்' தயாரிப்பாளருக்கு படம் ஒன்றை பண்ண திட்டமிட்டு இருக்கிறார்.
இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார் விக்ரம். இறுதியாக 'பிரம்மன்' இயக்குநர் சாக்ரடீஸ் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, இப்படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்த முதலீட்டில் முழுக்க சென்னையிலே முழு படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இப்படத்தை முடித்துவிட்டு தான் 'சாமி 2' படத்த...