போட்ட காசை எடுத்தால் போதும் : தயாரிப்பாளருக்கு கே. பாக்யராஜ் யதார்த்த வாழ்த்து!
'அய்யனார் வீதி ' படக்கதை. இப்படத்தில் ஐயராக பாக்யராஜும், ஐயனாராக பொன்வண்ணனும் நடித்துள்ள னர்.. ஜிப்ஸி என். ராஜ்குமார் இயக்கியுள்ளார். யூ.கே..முரளி இசையமைத்துள்ளார். ஸ்ரீசாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல், விஜயசங்கர் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கேவி ஸ்டுடியோவில் இன்று நடந்தது.
பொதுவாக சினிமா விழாக்களில் வாழ்த்திப் பேசும்போது 'இந்தப்படம் நூறுநாள் ஓடவேண்டும்',' வெற்றிவிழாவில் சந்திப்போம் 'என்றெல்லாம் மிகையாகப் பேசி வாழ்த்துவதுண்டு. இன்றைய சினிமா சூழலில் நூறுநாள் ஓடுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும்.. ஆனாலும் விழாவுக்கு விழா அப்படித்தான் கூறிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் 'அய்யனார் வீதி' படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு விட்டு அந்த விழாவில் பேசிய கே.பாக்யராஜ், 'தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் ' என்று யதார்த்தமாக பே...