மொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸ் தேதி வெளியானது!
காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துவரும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் எனவும் இதைதொடர்ந்து படம் டிசம்பர் 23-ம் தேதி திரைக்குவரும் எனவும் சொல்லப்படுகிறது. சாய் ரமணி இயக்கிவரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக டார்லிங் புகழ் நிக்கி கல்ராணி நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் வெற்றிபெற்ற பட்டாஸ் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது....