ரஜினியுடன் மோதும் எமிஜாக்சன்
தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஹீரோ-ஹீரோயினி இருவரும் சண்டை காட்சிகளில் நடிப்பது என்னவோ அரிதான விசயமாகத்தான் இருந்து வருகிறது.
ஆனால், அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்த ஆதிபகவன் படத்தில் அப்பட நாயகி நீது சந்திராவுடன் ஒரு சண்டை காட்சியில் நடித்தார்.
அவர்கள் இருவரும் மோதிக்கொண்ட காட்சி ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து இப்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் நடித்து வரும் 2.ஓ படத்திலும் ரஜினியுடன் எமிஜாக்சன் மோதிக்கொள்ளும் ஒரு அதிரடியான சண்டை காட்சி படமாக்கப்பட உள்ளது.
இந்த படத்தில் ஏற்கனவே அக்சய்குமாருடன் ரஜினி நடித்த ஒரு சண்டை காட்சியை படமாக்கியுள்ள ஷங்கர், அடுத்தபடியாக ரஜினியுடன் எமிஜாக்சன் மோதிக்கொள்ளும் ஒரு சண்டை காட்சியை பிரமாண்டமாக படமாக்குகிறாராம்.
ரோபோ கெட்டப்பில் எமிஜாக்சன் நடிக்கும் இந்த சண்டை காட்ச...