றெக்க படத்தில் அதிரடி ஹீரோவாக கலக்கியுள்ள விஜய் சேதுபதி
அப்பாவி, ரவுடி, போலீஸ் அதிகாரி என, யதார்த்தமான வேடங்களிலேயே நடித்த விஜய் சேதுபதி, இப்போது, ரூட்டை மாற்றியுள்ளார். அவருக்கும் ஆக் ஷன் புயலாக மாற வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது போலிருக்கிறது.
லட்சுமி மேனனுடன் நடிக்கும் றெக்க படத்தில் அதிரடி ஹீரோவாக கலக்கியுள்ளாராம். ஆக்ஷன் வேடங்களில் நடித்தால் தான், கிராமப்புறம் வரை ரீச் ஆக முடியும் என, அவருக்கு கூறப்பட்ட ஆலோசனையால் தான், இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய் சேதுபதி. இதுவரை, நகர்ப்புற ரசிகர்களின் வரவேற்பை மட்டுமே பெற்ற விஜய் சேதுபதி, றெக்க படத்துக்கு பின், கிராமப்புற ரசிகர்களின் பாராட்டுகளையும் பெறுவார் என்கிறது படக்குழு....