
விஜய்க்கு நான்காவது வில்லனாகும் R.K.சுரேஷ்
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60 வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில வெளிநாடுகளில் நடந்து முடிந்து தமிழகத்தில் சில ஊர்களில் நடந்து வந்தது. கடைசியாக பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்க இருந்தது.
ஆனால் நடுரோட்டில் நடந்த படப்பிடிப்பை காண ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், மூடுஅவுட்டான விஜய், படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றச்சொல்லி விட்டார்.
அதனால் தற்போது மீண்டும் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. அதற்கான செட் போடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.
மேலும். இந்த படத்தில் ஏற்கனவே ஜெகபதி பாபு, டேனியேல் பாலாஜி, மைம்கோபி என பல வில்லன்கள் நடித்து வரும் நிலையில், நான்காவதாக ஒரு வில்லன் தேடப்பட்டு வந்தார்.
இப்போது அந்த வில்லன் வேடத்துக்கு தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கமிட்டாகியிருக்கிறார். ஏற்கனவே பாலாவின் தாரைத்தப் பட்டை படத்தில் அதிரடி வில்லனாக நடித...