Monday, December 2
Shadow

Tag: விஜய் சேதுபதி

முரளிதரன் பயோபிக்கில் இருந்து விஜய் சேதுபதி விலக திட்டம்?

Latest News, Top Highlights
பாலிவுட்டில் வருடா வருடம் நிறைய பயோபிக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுக்கான பையோபிக்களும் எடுத்து வரப்படுகிறது. தோனி, சச்சின், அசாருதின், தற்போது கபில் தேவ் என்று பயோபிக்கள் நீண்டு கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. தன் பயோபிக் உருவாகவுள்ளது தொடர்பாக முத்தையா முரளிதரன், “விஜய் சேதுபதி போன்ற ஒரு திறமையான நடிகர் என் கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு பெருமை” என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது...

பிரபல சுழற்பந்து வீச்சாளரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

Latest News, Top Highlights
இலங்கை கிரிக்கெட் வீரரும், பந்து வீச்சில் உலக சாதனை படைத்துவருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வராலாற்று திரைபடமாக உள்ளது. மிகபெரிய பட்ஜெட்டில் இந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த படம் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு 800 என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
மன நலம்  குன்றிய  வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி  

மன நலம்  குன்றிய  வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி  

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி நடித்த “கடைசி விவசாயி” தழிழ் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.  காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மணிகண்டன்  கடைசி விவசாயி என்ற பெயரில் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் இதில் கடைசி விவசாயியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியையும் மேற்கொண்டிருக்கும் இயக்குநர் மணிகண்டன் அண்மையில் இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மன நலம்  குன்றிய  வேடத்தில்  நடித்திருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது....

முன்னணி மலையாள நடிகருடன் இணையும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாக உள்ள புதிய படம் ஒன்றில் முன்னணி மலையாள நடிகரான மம்முட்டியுடன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைய உள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகில் மிகவும் பிசியாக இருந்து வரும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரும், இந்த படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிப்பதை அறிந்து, இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன....

விஜய் சேதுபதி வெளியிட்ட மிருகா பர்ஸ்ட் லுக்

Shooting Spot News & Gallerys
ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் நடிகை ராய் லட்சுமி நடிப்பில் நீயா 2' படம் திரைக்கு வர தயாராகவுள்ளது. மேலும் இவர் தற்போது சிண்ட்ரெல்லா' மற்றும் நடிகர் ஸ்ரீகாந்துடன் ஒரு படம் என 2 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ஸ்ரீகாந்துடன் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகியள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 'மிருகா' என தலைப்பிட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....
வெளியானது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு

வெளியானது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு

Latest News, Top Highlights
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 30ஆவது படத்திற்கு சங்கதமிழன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். முதன் முதலாக இப்படத்தில் திருநங்கையாக (ஷில்பா) நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து கடைசி விவசாயி, சிந்துபாத், ஷியா ராம் நரசிம்ம ரெட்டி, மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது....
விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகி இருக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியிருக்கிறது. இதில் இயக்குநர் கோகுல், நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சமீபத்தில் வெளியான ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக்குக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜுங்கா என்ற கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் டானாக நடிக்கிறார். சித்தார்த் விப்பின் இசையமைக்கும் இந்த படம் கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்கும் பிரபல நடிகர்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்கும் பிரபல நடிகர்

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது. ரஜினி அடுத்ததாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் ரஜினி தனது அரசியல் பணிகளை ஓரளவு முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘இறைவி’ படங்களில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். எனவே, ரஜினி நடிக்கும் இந்த படத்திலும் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று செய்தி வெளியாகியது விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், ரஜினியின் தம்பியாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக புதிய தகவ...
சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் `செக்க சிவந்த வானம்’

சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் `செக்க சிவந்த வானம்’

Latest News, Top Highlights
`காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் `செக்க சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளத்தில் சில தகவல்கள் கசிந்திருக்கின்றன. விஜய் சேதுபதி போலீசாக நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், சிம்பு, அரவிந்த் சாமி மற்றும் அருண்விஜய்யின் கதாபாத்திரம் குறித்த ஒரு பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், அருண் விஜய் கோவக்காரராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு தகவலின்படி படத்தில் இந்த 4 பேரும் அண்ணன், தம்பிகளாக நடிப்பதாக ஒரு தகவலும் சமீபத்தில் உலா வந்தது. மேலும் இந்த படம் தொழிற்சாலை மாசை மையப்படுத்தி உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்ற...
பகத் பாஷில் இடத்தை பிடித்த அருண் விஜய்

பகத் பாஷில் இடத்தை பிடித்த அருண் விஜய்

Latest News, Top Highlights
மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்திற்கு `செக்க சிவந்த வானம்' என்று தலபை்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி உள்ளிட்ட பலரும் நடிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. அதில் பகத் பாஷிலுக்கு பதில் நடிகர் அருண் விஜய் படக்குழுவில் இடம்பிடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்...