Wednesday, January 15
Shadow

Tag: விஜய் சேதுபதி

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரைவிமர்சனம் (கலாட்டா கலக்கல்)

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரைவிமர்சனம் (கலாட்டா கலக்கல்)

Review, Top Highlights
கருப்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள அடுத்த படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக பூர்த்தி செய்தது. படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்பதை பார்த்து விடலாம். ஆந்திர மாநிலம் எமசிங்கபுரம் என்ற ஒரு மலைகிராமம் தான் படத்தின் கதைக்களம். இங்கு வாழும் அனைவரும் நேர்மையாகவும், யாரையும் துன்புறுத்தாமலும் திருடுவது மட்டும் தான் இவர்களது தொழில். எமனையே முதற்கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். இந்த கூட்டத்திற்கு விஜய் சேதுபதி தான் இளவரசர். தனது நண்பர்கள் இருவருடன் திருடுவதற்காக சென்னை வருகிறார் விஜய் சேதுபதி. அங்கு நாயகி நிகாரிகாவை சந்திக்கிறார். அவரை கடத்திச் சென்று விட வேண்டும் என்று சில திட்டங்கள் போட்டு தோல்வியடைந்தாலும், இறுதியாக அவரை கடத்தி தனது கிராமத்திற்கு சென்று...
விஜய் சேதுபதி படத்தில் டப்ஸ்மேஷ் மிர்னாலினி

விஜய் சேதுபதி படத்தில் டப்ஸ்மேஷ் மிர்னாலினி

Latest News, Top Highlights
தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்து வரும் படம் `சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் டப்ஸ்மேஷ் பிரபலம் மிர்னாலினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் மிர்னாலினி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்....
’சீதக்காதி’யால் விஜய் சேதுபதிக்கு எழுந்த சோதனை!

’சீதக்காதி’யால் விஜய் சேதுபதிக்கு எழுந்த சோதனை!

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி நடிப்பில் வரும் வெள்ளி அன்று உலகம் முழுவது வெளியாகவிருக்கிறது இப்படத்தினை தொடர்ந்து தற்போது 96, சூப்பர் டீலக்ஸ் மற்றும் சீதக்காதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சீதக்காதி படத்தினை பாலாஜி தரணிதரன் இயக்கி வருகிறார். பல்வேறு முன்னனி நாயகர்கள் கெளரவ வேடங்களில் நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 16 ஆம் தேது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. கடந்த 300க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தமிழகத்தில் செத்தும் கொடுத்த சீதக்காதி என்ற சொல்வழக்கு புழக்கத்தில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீதக்காதி பெரும் வள்ளல், வணிகர், சேதுபதி மன்னரின் அமைச்சரவையும் அழங்கரித்ததோடு மட்டுமின்றி இந்து-இஸ்லாமிய சமய நல்லிணக்கத்திற்கும் பாடுபட்டவர். இதனால் 'சீதக்காதி' தி...
4 நிமிட வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்திய விஜய் சேதுபதி!

4 நிமிட வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்திய விஜய் சேதுபதி!

Latest News, Top Highlights
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது ‘ ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. வரும் வெள்ளியன்று படம் திரைக்கு வர இருக்கிறது. மேலும், கவுதம் கார்த்திக், காயத்ரி என சில முன்னனி நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில் விஜய் சேதுபதிக்கு நிறைய கெட்டப்கள் இருக்கும் என்று செய்தி வந்தது. ஆனால் அவை ஒரு பாடலுக்கான கெட்டப்புகள் மட்டுமே என அவர் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது, படத்தின் முக்கியமான காட்சியின் ஒரு பகுதியாக 4 நிமிட நீளமான வசனத்தை ஒரே டேக்கில் விஜய் சேதுபதி பேசி அசத்தியுள்ளதாகவும், இந்த 4 நிமிட வசனம் முழுவதும் திரையரங்கில் கைத்தட்டல் நிச்சயம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர்கள் நீளமான வசனம் பேசி கைத்தட்டல் வாங்குவது தமிழ் சினிமாவில் புதிதில்லை என்றாலும் விஜய் சேதுபதி பேசியிருப்பதாகக் கூறப்படும் 4 நிமிட வசனம் அவருக்கு முதல் முறையே. விஜய் சேத...
பிறந்தநாளில் நியூ லுக்கில் இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி

பிறந்தநாளில் நியூ லுக்கில் இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார். பிறந்த நாளை முன்னிட்டு விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சீதக்காதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கின்றனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத விஜய் சேதுபதியை இந்த போஸ்டரில் காண முடிகிறது. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகும். இந்த போஸ்டர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. மேலும் படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக இப்படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன், ‘சீதக்காதி’ படத்தின் போஸ்டர் ரசிகர்களின் வாயை பிளக்க வைக்கும் என்று கூறினார். அதன்படியே ...
விஜய் சேதுபதிக்கு இது இரண்டாவது முறை

விஜய் சேதுபதிக்கு இது இரண்டாவது முறை

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', `இமைக்கா நொடிகள்' படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதுதவிர விஜய் சேதுபதி தற்போது `சூப்பர் டீலக்ஸ்', `96', `சீதக்காதி', `ஜுங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் சிரஞ்சீவியுடன் இணைந்து `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்கிறார். அதேநேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, சிம்பு, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான, சிறிய கதபாத்திரத்திற்கு தான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஜய...
கொலை செய்ய துணிந்த சமந்தா – வைரலாகும் வீடியோ

கொலை செய்ய துணிந்த சமந்தா – வைரலாகும் வீடியோ

Latest News, Top Highlights
‘ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா அடுத்ததாக இயக்கிய வரும் வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் முதல்முறையாக திருநங்கையாக நடிக்கிறார். பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். பி.எஸ்.வினோத் மற்றும் நிரவ்ஷா ஒளிப்பதிவு பண்களை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரத்திற்கான புகைப்படம் வெளியாகி மூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், சமந்தா கதாபாத்திரம் குறித்து சி...
புத்தாண்டில் படத்தின் டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி

புத்தாண்டில் படத்தின் டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தை எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கியாவோஸ் விதி. தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரஸ்யமாய் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாலா. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்து...
நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்

நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இதில் அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். நயன்தாராவிற்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தை டிமான்ட்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....