விஜய்-அஜித்தை விட அதிகம் சம்பளம் பெற்ற பிரபல நடிகர்…!
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு தெலுங்கு பேசும் மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் இந்தியா மட்டுமின்றி தெலுங்கு மக்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, சவுதி போன்ற இடங்களிலும் வசூலை அள்ளுகின்றன.
தற்போது மகேஷ் பாபு Sarileru Neekevvaru என்ற படத்தில் நடித்து வருகிறார். அதை அணில் ரவிப்புடி இயக்குகிறார். இந்த படத்திற்காக மகேஷ் பாபு 52 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.
இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் மகேஷ் பாபு இதை பணமாக பெறப்போவதில்லை. படத்தின் non-theaterical உரிமையை மகேஷ் பாபு சம்பளத்திற்கு பதில் பெறுகிறார். அது தற்போது 52 கோடி ருபாய் அளவுக்கு விலைபோயுள்ளது என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய்-அஜித் கூட ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்குவார்களா என்றால் கேள்விக்குறிதான். அடுத்த வருடம் பொங்கலுக்கு...