விஷால் நற்பணி மன்றங்கள் சார்பில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஷால் !!
நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு “ சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மகளிர் அணி “ சார்பில் மகளிர் அணி தலைவி மஞ்சுளா தலைமையில் மாபெரும் இரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதை நடிகர் விஷால் துவக்கி வைத்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட புரட்சி தளபதி விஷால் இளைஞர் அணி சார்பில் “ மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா “ இன்று நடைபெற்றது. இவ்விழாவை துவக்கி வைத்து ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கான ஏற்ப்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ப. கண்ணன் செய்திருந்தார்.
இன்று நடைபெற்ற நடிகர் விஷாலின் பிறந்தநாள் பிறந்த நாள் விழாக்கள் அனைத்தையும் மேலாளர் எம்.எஸ். முருகராஜ் , புரட்சி தளபதி விஷால் ரசிகர் நற்பணி மன்ற மாநில தலைவர...
