Tuesday, April 29
Shadow

Tag: 2.0

ஒரேநாளில் ரஜினிக்கு மகிழ்ச்சி அளித்த மூன்று விஷயங்கள்

ஒரேநாளில் ரஜினிக்கு மகிழ்ச்சி அளித்த மூன்று விஷயங்கள்

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் நள்ளிரவு வெளியானது. இந்த டீசருக்கு ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. டீசர் வெளியான மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினிக்கு மற்றொரு மகிழ்வான நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் சவுகார் பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹோலிப் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ரஜினி தனது வீட்டில் ஹோலிப் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இன்று ரஜினியின் மனைவி, லதா ரஜினிகாந்த்த...
நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு!

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நலையில், ஏற்கனவே ‘காலா’ டீசரை காண அதீத ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள், நாளை வெளியாகும் டீசரை காணும் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக காலா டீசர் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நாளை டீசர் வெளியாகி யூடியூப்பில் இதுவரை படைத்த சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலா படத்தில் ரஜினி மும்பை கேங்ஸ்டராக வருகிறார். ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல...
மீண்டும் ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் கமல்ஹாசன்

மீண்டும் ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் கமல்ஹாசன்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'. இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு விஸ்வரூபம்-2 ரிலீசாக இருக்கிறது. கிராபிக்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து இருக்கிறது. இந்நிலையில், விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட இருப்பதாக போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், கமலின் விஸ்வரூபம்-2 டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏப்ரலில் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப...
ரஜினி திட்டம்போட்ட நாளில் களமிறங்கும் கமல்

ரஜினி திட்டம்போட்ட நாளில் களமிறங்கும் கமல்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'. இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஸ்வரூபம்-2 ரிலீசாக இருக்கிறது. கிராபிக்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் தற்போது துவங்கி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசனும் டப்பிங் பணிகளில் பிசியாகி இருக்கிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏப்ரலில் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளாராம். அதுவும் ரஜினியின் `2.0' படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த ஏப்ரல் 27-ஆம் தேதியே வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் `2.0' ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த இடத்தை கமல் நிரப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ...
ரஜினியை வைத்து `முதல்வன்-2′ படத்தை இயக்கும் ஷங்கர்

ரஜினியை வைத்து `முதல்வன்-2′ படத்தை இயக்கும் ஷங்கர்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் `2.0' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள `காலா' படம் ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். விரைவில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற தலைப்பில் இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் மாற்றத்தை விரும்புகிறவர்களை இணையும்படி தெரிவித்திருந்தார். தற்போது வரை அதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ரசிகர்கள் சந்திப்பின் போது, `காலா' படத்திற்கு என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது. ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார...
ரஜினிக்காக தனது வேலையை உதறித் தள்ளிய சினிமா பிரபலம்

ரஜினிக்காக தனது வேலையை உதறித் தள்ளிய சினிமா பிரபலம்

Latest News, Top Highlights
லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியான ராஜூ மகாலிங்கம் ரஜினிகாந்தின் அரசியல் கட்சியில் இணைவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லைகா நிறுவனத்தில் இந்திய தலைமை அதிகாரியாகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் ராஜூ மகாலிங்கம். லைகா நிறுவனம் சார்பில் ரூ. 450 கோடி செலவில் 2.0 படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இவரது தீவிர ரசிகரான லைகா புரொடக்‌ஷன்ஸின் ராஜூ மகாலிங்கம், ரஜினியின் கட்சியில் இணைவதற்காக லைகா நிறுவனத்தில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜூ மகாலிங்கம் அளித்துள்ள பேட்டியில், ‘’முதலில் நான் ரஜினி சாரின் ரசிகர். க...
பத்திரிக்கையாளரை தாக்கிய இயக்குனர் ஷங்கர் மன்னிப்பு கேட்டார் .

பத்திரிக்கையாளரை தாக்கிய இயக்குனர் ஷங்கர் மன்னிப்பு கேட்டார் .

Latest News
இந்திய சினிமாவின் மிக பெரிய மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இது நாம் அறிந்த விஷயம் தற்போது இவர் இயக்கி கொண்டு இருக்கும் படம் ரஜினிகாந்த் மற்றும் ஹிந்தி பிரபல ஹீரோ அக்ஷய்குமார் எமி ஜாக்சன் மற்றும் பல நடிக்கும் 2.௦ படம் இந்தியாவிலே அதிக பொருள் செலவில் உருவாகும் படம் என்றால் அது இந்த படம் தான் என்று சொல்லணும் . இவர் அதிக செலவில் படம் எடுக்கலாம் அதுக்காக இந்த உலகமே அவருக்கு சொந்தம் ஆகிவிடாது இல்லையா ஆம் நேற்று இவர் படபிப்பில் செய்த தவறால் நடந்த விஷயம் வாங்க பார்க்கலாம். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் '2.0' படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. புதன்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் 2.0 படப்பிடிப்பு நடைபெற்று வந்ததால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 'தி இந்து' பத்திரிகையாளர்கள் எஸ்.ஆர்.ரகுநாதன்,...