70 வயது நிரம்பிய நடிகரை தேடும் தேசிய விருது இயக்குனர் மணிகண்டன்
"கலப்பையின் உழைப்பே அகப்பையில் சோறு..." என்ற கருத்தை நாம் யாரும் என்றுமே மறந்து விட கூடாது. என்ன தான் தமிழ் ரசிகர்கள் சினிமாவில் காதல், அதிரடி, நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் ஆகிய குணங்களை விரும்பினாலும், சமூதாய அக்கறை கொண்ட திரைப்படங்களுக்கு மட்டும் அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு உண்டு. இயக்குனர் மணிகண்டன் இயக்கிய 'காக்கா முட்டை' திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம். காக்க முட்டை படத்தை தொடர்ந்து 'குற்றமே தண்டனை' மற்றும் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கி இருக்கும் இயக்குனர் மணிகண்டன், தற்போது தன்னுடைய அடுத்த படைப்பான 'கடைசி விவசாயி' படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்க இருக்கிறார். 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' தயாரிக்க இருக்கும் இந்த 'கடைசி விவசாயி' படத்தில் 70 வயது நிரம்பிய முதியவர் தான் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த வேடத்திற்கு கனக்கட்சிதமாக பொருந்தும...