Tag: A.R.Raghuman
நவம்பர் 20ம் தேதி “2.o” படத்தின் பர்ஸ்ட் லுக்
நவம்பர் 20ம் தேதி "2.o” படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட மிகப் பிரம்மாண்டமான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது லைகா புரொடக்ஷன்ஸ்.
மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெற இருக்கிறது. இவ்விழா லைகா நிறுவத்தினத்தின் அதிகாரப்பூர்வ யு-டியூப் பக்கத்தில் (https://www.youtube.com/LycaProductions) பிரத்யேகமாக நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது. மேலும் லைகாவின் மொபைல் அப் (Android & IOS) மூலமாக இந்நிகழ்வை நேரடியாக காணலாம்.
இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குநர் ஷங்கர், அக்ஷய்குமார், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், எமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்விழாவை தொகுத்து வழங்கவிருக்கிறார் இந்தி திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரன் ஜோஹர் அவர்கள்.
முதன் முறையாக “2.o...
ரசிகர்களுடன் ‘தள்ளிப்போகாதே’ பாடலை கண்டு ரசித்த ஏ.ஆர்.ரகுமான்
சிம்பு நடிப்பில் பல தடைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளிவந்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. கவுதம்மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு-கவுதம்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் வெளிவந்த இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அந்த எதிர்பார்ப்புகளையும் இந்த படம் ஓரளவுக்கு திருப்தியை கொடுத்திருக்கிறது எனலாம். வசூலிலும் இப்படம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் மிகவும் ஹிட்டான ‘தள்ளிப்போகாதே’ பாடலுக்கு ரசிகர்கள் எந்தளவுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரையரங்குக்கு சென்று ரசிகர்களோடு சேர்ந்து கண்டுகளித்துள்ளார்.
இதற்காக சென்னை சத்யம் திரையரங்குக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான், படம் திரையிடப்பட்ட அரங்கின் உள்ளே உள்ள படிக்கட்டிலேயே ...