Saturday, February 8
Shadow

Tag: accident

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு…

Latest News, Top Highlights
சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாகச் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார். இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர். இதன...
படப்பிடிப்பில் விபத்து நடிகர் விஷால் படுகாயம்

படப்பிடிப்பில் விபத்து நடிகர் விஷால் படுகாயம்

Latest News, Top Highlights
துருக்கியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு நடிகர் விஷாலுக்கு கை, கால்களில் அடிபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஷாலை வைத்து ‘மத கஜ ராஜா’ மற்றும் ‘ஆம்பள’ என இரண்டு படங்களை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இதில், ‘மத கஜ ராஜா’ இன்னும் ரிலீஸாகவில்லை. இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இந்நிலையில், மூன்றாவது முறையாக விஷால் - சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்பை 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக வி‌ஷால், தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் துருக்கி புறப்பட்டுச் சென்றனர். அங்கு கேப்படோசியாவில் உள்ள மலைப்பகுதியில் வி‌ஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ...