
நயன்தாரா விஸ்வாசம் படத்தில் நடிக்க இதுதான் காரணம்!
அஜித்துடன் - சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடி யார் என்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், நயன்தாரா நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நயன்தாரா படங்களுக்கென்று தனி மவுசு இருக்கிறது. இந்நிலையில், அஜித்துடன் அவர் ஜோடி சேர்ந்தால் ரசிகர்களிடம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆகவே, நயன்தாராவை நடிக்க வைப்பதில் தீவிரம் காட்டினார்கள். அதற்காக, பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், முதலில் அவர் தயக்கம் காட்ட, அஜித் படம் என்பதாலும், நல்...