
என் திருமணம் தடையா சமந்தா மனம் திறக்கிறார்
சமந்தா தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்து பெற்றவர் தொடர்ந்து அவரை பற்றியும் அவர் திருமணத்தை பற்றியும் எதாவது தவறான தகவல் வந்து கோடி தான் இருக்கிறது இதற்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு சில விஷயங்களை மனம்திறந்து பேசினார் .
“வாழ்க்கை என்பது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் உயர்ந்த இடத்துக்கு போகிறார்களா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால் போக வேண்டும் என்ற இலக்கு இருக்க வேண்டும். நான் சினிமாவில் இந்த நிலைமைக்கு வருவேன் என்று கற்பனை கூட செய்யவில்லை. ஆனால் வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. முன்னணி கதாநாயகியாக உயர வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக உழைத்தேன். தற்போது என்னுடைய எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது.
முதல் படத்தில் வெற்றியை கண்ட பல கதாநாயகிகள் அதன்பிறகு காணாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் எனது முதல் படம் வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து பட வாய...