
தனது திருமண தேதியை அறிவித்த பிரபல நடிகை
தனது காதலர் ஜார்ஜ் பெனாய்ட்டோவை தான் திருமண செய்ய உள்ள தேதியை அறிவித்தார் நடிகை எமி ஜாக்சன்.
இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமிஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
எமி ஜாக்சனுக்கும் பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. இவருக்கு இங்கிலாந்தில் சொந்தமாக பல நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நெருக்கமாக இருக்கும் படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர்.
எமிஜாக்சனுக்கு இது 4-வது காதல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தி நடிகர் பிரகத் பாபருடன் சுற்றினார். அதன்பிறகு ஜோ சிக்ரிக்குடன் காதலில் இருந்தார். பின்னர் 22 வயது நடிகரான ரியான் தாமசுடன்...