
தெலுங்கில் ரீமேக்காகும் அஞ்சுக்கு ஒண்ணு
எவர்கிரீன் S.சண்முகம் தயரிப்பில் ஆர்வியார் இயக்கிய திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு.இத்திரைப்படம் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. தற்பொழுது இத்திரைப்படம் தெலுங்கில் தயாராக உள்ளது. கதையில் சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே செய்து தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. தமிழில் இத்திரைப்படத்தை இயக்கிய ஆர்வியாரே தெலுங்கிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகன் சித்தார்த், மற்றும் கதாநாயகியாக நடித்த உமாஸ்ரீ மட்டும் தெலுங்கில் நடிக்கிறார்கள். பிற நடிகர் நடிகைகள் தெலுங்கிலிருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தெலுங்கு தொழில்நுட்ப கலைஞர்கள் இத்திரைப்படத்தில் பணியாற்ற உள்ளனர். ...