‘திக். திக்.. திக்…’ ’ டீசருக்கு அதிகரிக்கும் வரவேற்பு – 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது!
‘திக். திக்.. திக்…’ டீசருக்கு அதிகரிக்கும் வரவேற்பு – 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது!
திரையரங்குகளிலும் டீசர் திரையிடப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு
ஒரே இரவில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘Dhik. Dhik.. Dhik…’ திரைப்படம், அதன் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்து, இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
டீசர் வெளியான வேகத்திலேயே ரசிகர்களிடம் உருவான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகர் ஆர்யா உள்ளிட்ட முன்னணி திரையுலகப் பிரபலங்கள் டீசரை வெளியிட்டு படக்குழுவுக்கு தங்களது ஆதரவைத் தெரி...









