![2016யில் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணி ஏமாற்றிய படங்கள்](https://www.cinemapluz.com/wp-content/uploads/2016/12/2016-movie-collage.jpg)
2016யில் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணி ஏமாற்றிய படங்கள்
ஒவ்வொரு வருடமும் ஒரு படத்திற்கு முதல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே சில படங்கள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். சில படங்கள் பற்றிய செய்திகள் வரவர அந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகும். சில படங்களின் பாடல்கள் வெளியாகும் போது அந்தப் படம் மீதான எதிர்ப்பு புதிதாக ஏற்படும். டீசர், டிரைலர் வெளியான பின் அட..வித்தியாசமாக இருக்கிறதே என சில படங்களைப் பார்க்கலாம் என்ற எண்ணம் ஏற்படும்.
இப்படி ஏதோ ஒரு விதத்தில் நம்முள் எதிர்பார்ப்புகளைத் தூண்டி இந்த 2016ம் ஆண்டில் ஏமாற்றிய படங்களும் உள்ளன. சரியான கதையைத் தேர்வு செய்யாதது, தொய்வில்லாத திரைக்கதை இல்லாதது, பொருத்தமான நட்சத்திரங்கள் இல்லாதது, ரசிக்கும்படியான பாடல்கள் இல்லாதது, மனதை ஈர்க்கும் ஒரு காட்சி கூட இல்லாதது, என பல இல்லாத விஷயங்களால் அந்தப் படங்கள் நம்மை ஏமாற்றியிருக்கும்.
அந்தப் படத்தில் நடித்தவர்கள், இயக்கியவர்கள், இசையமைத்தவர்கள் என யாரா...