ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக் பாஸ் படும்பாடு ரசிகர்கள் ஆவேசம்
இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் மஹத்-ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்படுவது போல காட்சிகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் தலைவியான யாஷிகாவுக்கு சிறப்பு பவர் ஒன்றை பிக்பாஸ் கொடுத்திருக்கிறார்.
அதன்படி நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரை யாஷிகா காப்பாற்ற முடியும். இதனால் ஐஸ்வர்யாவைக் காப்பாற்றவே பிக்பாஸ் இந்த சிறப்பு பவரைக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஐஸ்வர்யா நாமினேட் ஆகும் போதெல்லாம் ஏதாவது ஒரு வழியில் பிக்பாஸ் அவரைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக யாராவது ஒருவரை நேரடியாக நாமினேட் செய்யும்படி வீட்டின் தலைவருக்கு, பிக்பாஸ் சிறப்பு அதிகாரம் அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN...