பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு பெண்கள் மீது கை வைத்த சென்ராயன்
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. முதல் சீசனைப் போல நிகழ்ச்சி ஒர்த் இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்தாலும், கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் பரபரப்பான காட்சிகள் அறங்கேறி வருகிறது.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் மூலம் தான் இத்தகைய சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. காதல், ஊடல், கசமுசா என்று இருந்த போட்டியாளர்கள் தற்போது சண்டை, கோபம் என்று டென்ஷனோடு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், வெகுளித்தனம் கொண்ட சென்ராயன், திடீரென்று வேறு ஒரு மனிதராக ஆகியிருக்கிறார். இன்றைய எப்பிசோட்டில் அவர் நடந்துக் கொண்ட விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விளையாட்டுத் தனமாக இருக்கும் சென்ராயன், இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோட்டில் ஐஸ்வர்யா முடியை பிடித்து அவரை இழுத்துக் கொண்டு போவதோடு, முக பாவனைகளை வித்தியாசமாக காட்டவும் செய்கிறார்.
இதனை பார்க்கும் ப...