
விஜய் டிவியின் பிடியில் பிக் பாஸ் கமல்ஹாசன்
உலகில் பல நாடுகளில் பல முக்கிய தொலைகாட்சிகளில் நடத்த படும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏற்கனவே ஹிந்தியில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி மிக பெரிய வெற்றி பெற்ற நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியை தற்போது புதுமைகளை முதலில் புகுத்தும் விஜய் தொலைக்காட்சி நடத்த இருக்கிறது, இந்த ரியாலிட்டி தொடர் வரும் ஜூன் மாதம் 25ம் தேதியில் இருந்து இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்ன என்று கேக்குறிங்களா ஒரு வீட்டில் 14 பிரபலங்கள் இருப்பார்கள் கிட்டத்தட்ட நூறு நாட்கள் இந்த நூறு நாட்கள் அவர்களுக்கு தெரியாமல் காமெரா அதாவது எங்கு இருக்கு என்று தெரியாமல் ஒளித்து வைத்து இருப்பார்கள் இதில் யார் உண்மையான இயல்பான வாழ்கையை பதிவு செய்கிறார்கள் என்பது தான் அவர்களின் அசைவுகள் எண்ணங்கள் வெளியுலகத்துக்கு தெரியாத விஷயங்கள் அம்பலபடுத்தும் நிகழ்ச்சி ...