
தல பிறந்தநாளில் செம ட்ரீட் காத்திருக்கு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பு, ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாகவும், உத்வேகம் அளிப்பராகவும் இருக்கிறார். அஜித் நடிக்கும் புதிய படம் ரிலீசானால் போதும் தமிழ்நாடே திருவிழா போல காட்சி அளிக்கும். அப்படி இருக்கும்போது அஜித்தின் பிறந்தநாள் என்றால் சும்மாவா. உழைப்பாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி அஜித் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால் அவரது ரசிகர்கள் அஜித்தின் பிறந்தநாளுக்கு 2 மாதத்திற்கு முன்பே அஜித் பிறந்தநாளை டிரெண்டாக்கினர்.
அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்களே இருக்கும் நிலையில், அஜித்தின் தீவிர ரசிகரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அஜித் பிறந்தநாளில் மாஸான ட்ரீட் ஒன்று கொடுக்க இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் தற்போது பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகிற...