
நடிகை பிந்து மாதவி பிறந்த தினம்: அவரை பற்றி சில வரிகள்
இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், அவரது சிறுவயதில் திருப்பதி, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஹைதராபாத் எனப் பல நகரங்களில் வசித்தார். பின்னர் சென்னையில் நிரந்தரமாக அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கிய போது அங்கு பிந்து மாதவி படித்தார். வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார். டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்தது, இவர் தெலுங்கு திரைப்பட உலகுக்குள் நுழைய உதவியது. இவரது பெற்றோர் இவர் திரைப்பட நடிகையாவதை விரும்பவில்லை. தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் ...